மொபட் திருடிய வாலிபர் கைது


தூத்துக்குடியில் மொபட் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவியின் மொபட்டை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தாராம். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த போது, மர்ம நபர் மொபட்டை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி தோப்புத் தெருவை சேர்ந்த மகபு பாஷா மகன் முகம்மது இப்ராஹிம் பஷீர் (வயது 23) என்பவர் மொபட்டை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முகம்மது இப்ராகிம் பஷீரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் மீட்கப்பட்டது.


Next Story