கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x

நெல்லை அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 51). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூர்யா (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ராமசந்திரன் தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த சூர்யா, தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் ராமசந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.


Next Story