டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது


டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது
x

டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் தாந்தோணிமலை பூங்கா நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 46). இவர் ஒரு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வகுமார் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருமாநிலையூர்-ஈசநத்தம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் செல்வகுமாரை மறித்து அவரது செல்போனை பறிக்க முயன்றனர். இதுகுறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், செல்போனை பறிக்க முயன்றது திருமாநிலையூரை சேர்ந்த அருண் (22), பெரிய ஆண்டாங்கோவிலை சேர்ந்த அகிலன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அருணை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அகிலனை தேடி வருகின்றனர்.


Next Story