ரேஷன்அரிசி பதுக்கிய வழக்கில் வாலிபர் கைது
ரேஷன்அரிசி பதுக்கிய வழக்கில் வாலிபர் கைது
கோவை
குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி உக்கடம் ஜி.எம்.நகரில் ஒரு டெம்போ மினி வேனில் 2¼ டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசியை போத்தனூர் திருமறைநகரை சேர்ந்த நிஜாம் என்ற நிஜாமுதீன் (வயது 32) பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய நிஜா முதீன் குனியமுத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று நிஜாமுதீனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரது வங்கி கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.