செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது


செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது
x

பெல் தொழிற்சாலையில் பதவி உயர்வு கேட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையை அடுத்த முகுந்தராயபுரம் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1,500-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கி பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த முறையில் தேர்வான ஊழியர்கள் பயிற்சியை நிறைவு செய்து விட்ட நிலையில் அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் பதவி உயர்வு வழங்கக்கோரியும், தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story