கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

அரக்கோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 28) என்ற குதிரை சுரேசை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் வளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் சுரேஷ்குமாரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story