வாலிபர்,போக்சோ சட்டத்தில் கைது


வாலிபர்,போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 13 Aug 2022 1:29 AM IST (Updated: 13 Aug 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் தெற்கு தெருவை சேர்ந்தவர் லெனின் மகன் ராஜ் கண்ணா (வயது 23) இவர் டிப்ளமோ மெக்கானிக் முடித்துவிட்டு அந்த பகுதியிலேயே மெக்கானிக் கடை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்கண்ணா, 11-ம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தைகளை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ் கண்ணாவை கைது செய்தனர்.


Next Story