வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது


வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது
x

காதலிப்பதாக கூறி சிறுமியை அழைத்துச்சென்ற வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை அருகே உள்ள மணிமுத்தான்குளம் அய்யா கோவில் தெருவை சேர்ந்த பொன்னுத்துரை மகன் முத்து ஜவகர் (வயது 27). கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஒரு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பத்தமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேரன்மாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜென்சி விசாரணை நடத்தினார். சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்ற முத்து ஜவகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.


Next Story