நண்பருக்கு போன் செய்து விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


நண்பருக்கு போன் செய்து விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நண்பருக்கு போன் செய்து விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

செய்யாறு

நண்பருக்கு போன் செய்து விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒப்பந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். பேக்கரி மாஸ்டர். இவரது மகன் தமிழரசன் (வயது 21), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

தமிழரசன் கடந்த சில வருடங்களாக நோயினால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் ேநாய் குணமாகவில்லை.

இதனால் மனவேதனையில் இருந்து வந்த தமிழரசன், தேவிகாபுரத்தில் உள்ள நண்பர் சந்துருவுக்கு போன் செய்து எனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், நான் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்ளப்போகிறேன் எனக் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர் சந்துரு செய்யாறில் உள்ள நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து தமிழரசனை காப்பாற்றும்படி கூறியுள்ளார். உடனே நண்பர்களான பிரவீன், பாலாஜி ஆகியோர் தமிழரசன் வீட்டிற்கு சென்று பார்த்த போது தமிழரசன் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து இறந்த தமிழரசனின் தந்தை கிருஷ்ணன் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.


Next Story