விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

திருமயம் அருகே உள்ள கடியாபட்டி செல்லப்பன் செட்டியார் வீதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவரது மகன் கணேஷ் (வயது 19). இந்தநிலையில் கணேசுக்கும் அவரது தாயார் மாரியாயிக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த கணேஷ் விஷம் குடித்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் கணேஷை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story