விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
செஞ்சி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்
செஞ்சி,
செஞ்சி அருகே அத்தியூர் திடீர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் முருகேசன் (வயது 31). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story