விஷம்குடித்து வாலிபர் தற்கொலை


விஷம்குடித்து வாலிபர் தற்கொலை
x

விழுப்புரம் அருகே விஷம்குடித்து வாலிபர் தற்கொலை

விழுப்புரம்

செஞ்சி

விழுப்புரம் அருகே உள்ள கெடார் என்ற ஊர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ராமு மகன் மணிகண்டன்(வயது 28). திருமணமாகாத இவர் சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். வயிற்றுவலி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story