விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் மாமூடு நெல்லிக்கரை காட்டு விளையைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜ், கூலித் தொழிலாளி. இவரது மகன் கிறிஸ்டின் பால் அஜி (வயது 19). ஐ.டி.ஐ. படித்துக் கொண்டிருந்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும், இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு கிறிஸ்டின் பால் அஜி வழக்கம் போல் வீட்டில் தனது அறையில் தூங்க சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதனால், தாயார் அவரை எழுப்ப சென்றார். அப்போது, கிறிஸ்டின் பால் அஜி அசைவற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவரை மீட்டு உறவினர்கள் உதவியுடன் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கிறிஸ்டின்பால் அஜி விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதாக கூறினர்.

இதுகுறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story