விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

திருக்குறுங்குடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 21). கூலி தொழிலாளியான இவர் மது அருந்தி விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த தங்கராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story