விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம் அருகே உள்ள எசனைகோரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அமிர்தம். இவரது மகன் பவுல்ராஜ் (வயது 35).இவர் நேற்று காலை வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire