வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
வாசுதேவநல்லூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள சரவணாபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணக்குமார் மகன் மனோஜ் குமார் (வயது 17). சரவணக்குமார் இறந்துவிட்டதால் அவரது மனைவி வேறொரு திருமணம் செய்து கொண்டார். இதனால் மனோஜ் குமார் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் பல்வேறு இடங்களில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மனோஜ்குமாரின் உறவினரின் திருமணத்திற்காக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதில் அவரது பெயர், புகைப்படம் இல்லாததால் வருத்தத்துடன் காணப்பட்டார்.
இதனால் மனமுடைந்த மனோஜ் குமார் நேற்று முன்தினம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.