திருவட்டார் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


திருவட்டார் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 9:24 AM GMT)

திருவட்டார் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள சித்திரங்கோடு கருணாநிதி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 21). இவர் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் சுற்றிதிரிந்து வந்தார். இதை பால்ராஜ் கண்டித்ததால், இருவர் இடையேயும் வாக்குவாதம் நடந்தது.

இதனால் மனம் உடைந்த விக்னேஷ் சம்பவத்தன்று மேக்கோடு பில்லி குளம் அருகில் விஷம் குடித்துவிட்டு செல்போனில் தந்தைக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பதறிப்போன பால்ராஜ் அங்கு விரைந்து வந்து விக்னேசை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இது பற்றி பால்ராஜ் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story