வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கடையநல்லூரில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கற்பக சுந்தர விநாயகர் கோவில் தெருவை சார்ந்த சங்கரபாண்டியன் மகன் கந்தசாமி (வயது 34). இவருக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இவர் தனது மனைவியுடன் இடைகாலில் வசித்து வந்தார். அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து சொந்த ஊரான கடையநல்லூருக்கு வந்து விடுவார்.
இந்நிலையில் கடந்த 12-ந் தேதி வாழ்க்கையில் விரக்தி அடைந்த கந்தசாமி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் கந்தசாமியை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கந்தசாமி இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.