வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

திசையன்விளையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை மணலிவிளை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பால்துரை. இவருடைய மகன் வரதராஜன் (வயது 33). தொழிலாளியான இவர் அங்குள்ள கோவிலில் சாமியாடி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் வரதராஜன் கடந்த சில ஆண்டுகளாக குடல்வால் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டில் திடீரென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story