வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

குடியாத்தம் அடுத்த முக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் அய்யப்பன் (வயது 23). கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை மாட்டுக்கு கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அய்யப்பனின் தாயார் திலகா குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், பெருமாள் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அய்யப்பனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story