வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே கோடாரங்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 58). விவசாயி. இவருடைய மகன் புலமாடன் (27). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டார். அப்போது பெற்றோர் தற்போது பணம் இல்லை, சிறிது நாட்கள் கழித்து கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வாங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த புலமாடன் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவருக்கு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் புலமாடன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.