வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பாணாவரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த குப்புக்கல்மேடு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகன் பெருமாள் (வயது 21). சுங்குவாசத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் வயலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர் எம்.ஜி.ஆா். நகா் -பாலகிருஷ்ணாபுரம் செல்லும் வழியில் சமூகக்காடு பகுதியில் உள்ள மரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பாணாவரம் போலீஸ் நிலையதிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.