வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலாஜா அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜா

வாலாஜா அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த சென்ன சமுத்திரம் டோல்கேட் நகரை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகன் கார்த்தி (வயது 22). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. மேலும் குடிப்பழக்கத்தால் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து கார்த்தியின் மனைவி கோவித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்தி வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story