வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

கே.வி.குப்பத்தை அடுத்த வேப்பங்கநேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் மாட்டு இறைச்சி வெட்டும் கூலித் தொழிலாளி. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பெற்றோருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த பெற்றோர் இனிமேல் குடிக்க வேண்டாம் என்று மகனுக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சீனிவாசன், வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப் பதிவு செய்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story