வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ராணிப்பேட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே உள்ள அவரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் டெல்லிபாபு (வயது 25). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் பர்னீச்சர் கடையில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த டெல்லிபாபு சோகமாக காணப்பட்டார். அவரிடம் தாயார் சரஸ்வதி கேட்டதற்கு, உடல் நலம் சரியில்லை என கூறினார்.

இந்த நிலையில் டெல்லிபாபு நேற்று மது அருந்திவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story