வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூரை அடுத்த நாகநதி ஊராட்சி தெற்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சோனியா என்ற மனைவி உள்ளார். சதீஷ் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் மனைவி மற்றும் மாமியாரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி மற்றும் மாமியார் இருவரும் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து இருவரும் திரும்பி வந்த போது வீட்டில் உள்ள மின்விசிறியில் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story