மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Oct 2023 5:04 PM IST (Updated: 4 Oct 2023 5:48 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பெரணமல்லூரை அடுத்த மோசவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

டிரைவரான கார்த்திக், வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்கவில்லை மனம் உடைந்த கார்த்திக் டாஸ்மாக் கடையில் பிராந்தி வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் அவர் இறந்து விட்டார்.

இது குறித்து தேசூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கார்த்திக் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story