அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் வெங்கடேசன் (வயது 25). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் குணமடையவில்லை. இதில் மனமுடைந்த வெங்கடேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி வெங்கடசேன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story