திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை


திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
x

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

தா.பேட்டையை அடுத்த பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் சசிகுமார் (வயது 30). இவர் வெளிநாட்டில் சமையல் கேட்டரிங் வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த நிலையில் சசிகுமாருக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பல இடங்களிலும் பெண் பார்த்துள்ளனர். ஆனால் திருமணம் ஆகவில்லை.

இதனால் மனமுடைந்த சசிகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story