ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் சாவு


ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் சாவு
x

ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலியானார்.

விருதுநகர்

ஆலங்குளம்

ராஜபாளையம் அருகே உள்ள இனாம் செட்டிகுளத்தை சேர்ந்த அரவிந்த் (வயது25), முருகேசன் (20) ஆகிய இருவரும் ஆட்டோவில் பெயிண்ட் ஏற்றிகொண்டு வெம்பக்கோட்டைக்கு சென்றனர். கடையில் பெயிண்ட்டை இறக்கி வைத்து விட்டு பின்னர் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது அரவிந்த் ஆட்டோவை ஓட்டி வந்தார். கே.லட்சுமிபுரம் பஸ்நிறுத்தம் அருகே வரும் போது ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கல்லமநாயக்கர்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிைலயில் அரவிந்த் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Related Tags :
Next Story