அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சாத்தனூர் ஊராட்சி கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் ராம்குமார் (வயது 33). இவரது மனைவி கார்த்திகா வயது (30). இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வீட்டுக்கு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிகளில் சென்றார். கீழக்கோட்டை அருகே வரும்போது ரோட்டின் குறுக்கே நாய் வந்ததாக கூறப்படுகிறது. இதில் ராம்குமார் நிலை தடுமாறி அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் தவறி விழுந்தார். இதில் பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்து ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.