குளத்தில் மூழ்கி வாலிபர் பலி


குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
x

பாளையங்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி அய்யாகோவில் தெருவை சேர்ந்தவர் சின்னமாரி. இவரின் மகன் மகாராஜன் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள சீவலப்பேரியான் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக ஆழமான இடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் அவர் திடீரென மூழ்கினார். இதனை பார்த்த அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்கள் உடனடியாக தண்ணீரில் மூழ்கிய மகாராஜனை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மகாராஜன் ஏற்கனவே உயிர் இழந்ததாக கூறினார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story