மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

புகழூர் வள்ளுவர் நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் தீரன் (வயது 35). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மூலிமங்கலம் பகுதியில் இருந்து புகழூர் ஹைஸ்கூல் மேடு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த நாய்கள் திடீரென மோட்டார் சைக்கிளின் குறுக்கே வந்து முன் சக்கரத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தீரன் கீேழ விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தீரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தீரனின் தம்பி தமிழரசன் (29) கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story