பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 10:17 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானாா்.

கடலூர்

புவனகிரி:

மேல்புவனகிரி ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஜோதி(வயது 40). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் புவனகிரியில் இருந்து சேத்தியாத்தோப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே கீரப்பாளையத்தை சேர்ந்த இளையபெருமாள் மகன் இளவரசன்(27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அந்த சமயத்தில் சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக தலைக்குளம் சென்ற அரசு பஸ் சக்கரத்தில் இளரவசன் சிக்கினார். இந்த விபத்தில் காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இளவரசன் பரிதாபமாக இறந்தார். ஜோதி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story