டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள மணக்குடி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் வெற்றிவேல்(வயது 27). இவர் கலைக்குளம் கிராமத்தில் வசித்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் வெற்றிவேல் நேற்று முன்தினம் விவசாய பணியினை முடித்துவிட்டு இரவு கலைக்குளம் நோக்கி டிராக்டரில் வந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கண்மாய் மடையில் மோதி கண்மாய்க்குள் பாய்ந்தது. டிராக்டர் சக்கரத்தின் அடியில் சிக்கிய வெற்றிவேல் படுகாயம் அடைந்்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இளையான்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று வெற்றிவேலின் உடலை கைப்பற்றி இளையான்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.