மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x

வடக்கன்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அடுத்த பழவூர் அருகே உள்ள சங்கனாபுரத்தில் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கோவில் கொடை விழாவிற்கு செண்டை மேளம் அடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் பகுதியைச் சேர்ந்த சபின் மகன் லட்சுமணன் (வயது 23) என்பவர் வந்தார்.

அவர் நேற்று காலையில் குளிப்பதற்காக அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அங்கு குளித்துவிட்டு ஈர துண்டை அருகில் உள்ள இரும்பு கம்பியின் மீது காயப்போட்டார். அதன் வழியாக சென்ற மின்ஒயர் மீது மின்கசிவு இருந்துள்ளது. இதனால் லட்சுமணன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, லட்சுமணன் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Next Story