மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
தேவகோட்டை அருகே கட்டிட வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே கட்டிட வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கட்டிட வேலை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகன் வசந்தகுமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலையில்லாததால் அவ்வப்போது கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் ஆறாவயலில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வயர் உடலில் உரசியதில் மின்சாரம் தாக்கி காயமடைந்தார். உடனடியாக தேவகோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதுகுறித்து தேவகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகாத வசந்தகுமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.