புதிய மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு ஓட்டி வந்த வாலிபர் விபத்தில் சாவு


புதிய மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு ஓட்டி வந்த வாலிபர் விபத்தில் சாவு
x

சேந்தமங்கலம் அருகே புதிய மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு ஓட்டி வந்த வாலிபர் விபத்தில் பரிதாபமாக இறந்தாா்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

புதிய மோட்டார் சைக்கிள்

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள மாவிலர் தெருவை சேர்ந்தவர் துறை (வயது 49). விவசாயி. இவரது மகன் விஜய் (25). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் விஜய் புதிதாக மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கி உள்ளார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது வடுகப்பட்டி அருகே சாலையோரம் நடந்து சென்ற பூபதி என்பவர் மீது விஜயின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த விஜயை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பூபதி காயங்களுடன் உயிர்தப்பினார்.

சாவு

ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விஜய் நேற்று அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேந்தமங்கலம் அருகே புதிய மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு ஓட்டி வந்த வாலிபர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story