லாரி மோதி வாலிபர் சாவு
செங்கோட்டை அருகே லாரி மோதி வாலிபர் இறந்தார்
செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வாகைகுளம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் லட்சுமணன் (வயது 23). இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஊழியராக தங்கியிருந்து பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பிரானூர் பார்டர் சென்றபோது எதிரே வந்த லாரி நிலை தடுமாறி மோதியதில் லட்சுமணன் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நிலக்கோட்டை அருகே உள்ள செம்முட்டுபட்டி ஊரைச் சேர்ந்த முருகராஜன் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.