கார் மோதி வாலிபர் படுகாயம்
கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
கரூர்
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிசங்கர் (வயது 34). இவர் புன்னம் சத்திரம் அருகே பழமாபுரத்தில் உள்ள தனது பாட்டி செல்லம்மாளை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தண்ணீர் பந்தல் புதூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது அதே சாலையில் பின்னால் வந்த கார் கோபிசங்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோபிசங்கர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story