கார் மோதி வாலிபர் படுகாயம்
கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை
அன்னவாசல் புதுத்தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 32). இவர் அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது புதுக்கோட்டை ராஜாகோபாலபுரத்தை சேர்ந்த கார்த்திக் மணிகண்டன் (31) ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமரேசனை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story