சங்கராபுரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


சங்கராபுரம் அருகே    டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி


ரிஷிவந்தியம்,

சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 27). இவர் சீர்னந்தல் கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, இளையனார்குப்பம் நான்கு ரோடு அருகே செல்லும் போது எதிரே கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. இவர்கள் அருகருகே வந்த போது, எதிர்பாராத விதமாக டிராக்டர் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஹரிகிருஷ்ணன் டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவயிடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்த புகாரின்பேரின் பகண்டை கூட்ரோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story