பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலி


பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலி
x

பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலியானார்.

திருவண்ணாமலை

செங்கம்

பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலியானார்.

செங்கம் அருகே கொட்டகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். செங்கம்-திருவண்ணாமலை சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த பொக்லைன் வாகனம் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கொட்டகுளம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார், இறந்த வாலிபர் அரவி்ந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து செங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



Next Story