கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x

கார் மோதி வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 23). இவர் ராதாபுரம் அருகில் உள்ள காற்றாலையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் மூன்றடைப்பு அருகே உள்ள ஆயநேரி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, பின்னால் வந்த கார் கண் இமைக்கு நேரத்தில் பூல்பாண்டியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூல்பாண்டி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story