சிறுபாக்கம் அருகேகார் மோதி வாலிபர் பலி
சிறுபாக்கம் அருகே கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அனுகூலம். இவரது மகன் அருள்தேவன் (வயது 21). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரேன் மகன் சாந்தகுமார்(27). அருள்தேவனுக்கு கிராமத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் வீடு இருக்கிறது. இந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சாந்தகுமாருடன், அருள்தேவன் சென்றார்.அப்போது, சேலம்-விருத்தாசலம் சாலையை கடக்க முயன்றனர். அந்த வழியாக விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதல், படுகாயமடைந்த அருள்தேவன் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயங்களுடன் கிடந்த சாந்தகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.