கார் கவிழ்ந்து வாலிபர் பலி


கார் கவிழ்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Jun 2023 1:19 AM IST (Updated: 6 Jun 2023 3:30 PM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே நடுவூர்கரையைச் சேர்ந்தவர்கள் அனிஷ் (வயது 26), ஏசுராஜன் (28), அஜித் (28). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று அதிகாலையில் நெல்லையில் இருந்து தங்களது ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். நாங்குநேரி அருகே வாகைக்குளம் பகுதியில் சென்றபோது திடீரென்று கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட அனிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஏசுராஜன், அஜித் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த அனிஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story