அரசு பஸ் மோதி வாலிபர் பலி; நண்பர் படுகாயம்


அரசு பஸ் மோதி வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரையூர் காலனி பீட்டர்புரம் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவருடைய மகன் மன்மதன் (வயது 19). இவர் மராட்டிய மாநிலம் நாக்பூரில் பவர் பிளாண்ட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் அங்கிருந்து விடுமுறையில் 2 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் யுவராஜ் (24) என்பவர் தனது அக்காள் மகன் பிறந்த நாளை கொண்டாட ராமநாதபுரம் செல்வோம் என்று கூறியுள்ளார். இதன்படி அவர்கள் மேலும் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் வந்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மன்மதன் மற்றும் யுவராஜ் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு மன்மதனை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். காயம் அடைந்த யுவராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடன் சென்ற உறவினர் மாதவன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ்டிரைவர் கதைக்குளம் சுப்பிரமணியன் (55) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story