மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி - 2  பேர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் கலியப்பெருமாள் மகன் பாஸ்கர் (24), செந்தில் மகன் பூமிபாலன் (20), குமார் மகன் குணா (20). நண்பர்களான 3 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி சிதம்பரம் - சமயபுரம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குணா ஓட்டினார். மற்ற இரண்டு பேர் பின்னால் அமர்ந்திருந்தனர். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து பனமங்கலம் அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் வந்தபோது நிலைத்தடுமாறி பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குணா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பூமிபாலன், பாஸ்கர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story