மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலி
x

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார். நண்பர்கள் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார். நண்பர்கள் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நண்பர்கள்

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு கீழதெருவை சேர்ந்தவர் கரடிமாடன் (வயது 23). இவர் நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரத்தில் தங்கியிருந்து பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருடன் இருளப்பபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்த சுகின்(23) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கரடிமாடன், சுகின், அவரது நண்பர்களான இருளப்பபுரத்தை சேர்ந்த பரசுராமன்(23), அனீஸ்(23) ஆகிய 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சங்குத்துறை கடற்கரைக்கு சென்றனர். பின்னர் நள்ளிரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் உரசியது

அப்போது கரடிமாடனின் மோட்டார் சைக்கிளை சுகின் ஓட்ட அவர் பின்னால் அமர்ந்திருந்தாா். மற்றொரு மோட்டார் சைக்கிளை அனீஸ் ஓட்ட பரசுராமன் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் மேல உடையப்பன்குடியிருப்பு பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் உரசியதில் அவர்கள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சுகின் ஓட்டிய மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சாலையில் சருக்கி சென்றதில் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

வாலிபர் பலி

மேலும், படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுகின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கரடிமாடன், அனீஸ், பரசுராமன் ஆகிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கரடிமாடன் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story