வாகனம் மோதி வாலிபர் பலி


வாகனம் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரிய குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் வெங்கடேசன்(வயது 22). இவர் நேற்று இரவு விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், சேந்தமங்கலம் என்ற இடத்தின் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனின் மீது மோதிய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story